களுவாஞ்சிக்குடியில் நடைபெற்ற தவறான தகவல்களை இனங்காணலும் இல்லாதொழிப்பதற்குமான பயிற்சிப்பட்டறை.

களுவாஞ்சிக்குடி இராசமாணிக்கம் மண்டபத்தில் ஹெஸ்டக் தலைமுறை அமைப்பின் அனுசரணையுடன் மட்டு ஊடக அமையம் இணைந்து நடாத்திய தவறான தகவல்களை இனங்காணலும் இல்லாதொழிப்பதற்குமான பயிற்சிப்பட்டறை ஊடக அமைய தலைவர் வா.கிருஸ்ணா தலைமையில் நடைபெற்றது.
களுவாஞ்சிக்குடி மற்றும் வெல்லாவெளி பிரதேச செயலக பகுதியில் இருந்து விண்ணப்பித்த சமூக அமைப்புக்களைச் சேர்ந்த இளைஞர் யுவதிகள் மற்றும். ஊடகவியலாளர்கள் உட்பட முப்பதுக்கு மேற்பட்டவர்கள் இந்தப் பட்டறையில் பங்கேற்றனர்.முழுநாளும் நடைபெற்ற இந்த பட்டறையை விரிவுரையாளர் சிறப்பாக தொடர்ந்து நடாத்தினார். தவறான தகவல்களை வகைப்படுத்தி உரிய விளக்கம் தெளிவாக அளிக்கப்பட்டது. தவறான தகவல்களை இல்லாதொழிப்பதும் அதற்கான நடவடிக்ககைளும் பற்றி நீண்ட நேரம் கலந்துரையாடி தெளிவான விளக்கம் அளிக்கப்பட்டது.
தவறான தகவல் மற்றும் போலியாக தயார் செய்த படங்களால் தற்போது பல பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இவர்கள் இதற்கான நடவடிக்கை எடுப்பதற்கு தயங்குகின்றார்கள். ஆனால் அவர்களின் இரகசியத் தன்மை பேணப்பட்டு உரிய சட்ட நடவடிக்கைகள் எடுப்பதற்கு உரிய ஏற்பாடுகள் இருக்கின்றன. எனவே இவர்கள் இதற்கான நடவடிக்கைகளில் இறங்குவதற்கு தயங்கக் கூடாது அதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றன. எனவே அவற்றை அச்சமின்றி பயன்படுத்துவதற்கான விழிப்பூட்டலை செய்வதற்கு சமுக அமைப்புக்களுக்கு ஆதரவளிப்பதற்கான நிகழ்ச்சித் திட்டத்திற்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டுமென வலியுறுத்தப்படடது.
, களுவாஞ்சிக்குடியில் நடைபெற்ற தவறான தகவல்களை இனங்காணலும் இல்லாதொழிப்பதற்குமான பயிற்சிப்பட்டறை.









