இலங்கை செய்திகள்

கராப்பிட்டிய வைத்தியசாலையின் வைத்தியர்கள் காலவரையறையின்றி பணிப்பகிஷ்கரிப்பு

கராப்பிட்டிய வைத்தியசாலையின் வைத்தியர்கள் காலவரையறையின்றி பணிப்பகிஷ்கரிப்பு

காலி, கராப்பிட்டிய தேசிய வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (5) காலை 8 மணி முதல் காலவரையறையின்றி பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளனர்.

வைத்தியசாலையின் புற்றுநோயியல் பிரிவில் பணியாற்றும் விசேட வைத்தியர் ஒருவரின்  முறையற்ற நடத்தைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த விவகாரம் குறித்து இதற்கு முன்னர் தற்காலிக பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுப்பட்டிருந்தது.

கராப்பிட்டிய வைத்தியசாலையின் வைத்தியர்கள் காலவரையறையின்றி பணிப்பகிஷ்கரிப்பு

விசேட வைத்தியரின் நடத்தை தொடர்பில் நீண்டகாலமாக நிலவி வரும் கவலைகளை நிவர்த்தி செய்யுமாறு அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுப்பதே இந்த பணிப்பகிஷ்கரிப்பின் நோக்கம் என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் இணைச் செயலாளர் வைத்தியர் அசங்க கோனார தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னரும்  பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கைகள்  முன்னெடுக்கப்பட்ட  போதிலும் உரிய தீர்வுகள் எதுவும் வழங்கப்படாததால், வைத்தியர்கள் அதிருப்தி அடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Back to top button