கல்முனையில் உலக சுற்றாடல் தின வாரம் 30.05.2024 தொடக்கம் 05.06.2024 வரைக்கும் கொண்டாப்படுகிறது.

(சித்தா)
உலக சுற்றாடல் தின
வாரம்
30.05.2024 தொடக்கம் 05.06.2024 வரைக்கும் கொண்டாப்படுகிறது. ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு விதமான
கருப்பொருளின் கீழ்
செயற்படுத்தும்படி அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளமைக்கு அமைவாக
30.05.2024 இல்
நிழத்தை மாசடையாமல் பாதுகாத்தல் அதாவது
மண்
பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மற்றும் கல்முனை – 1 E
பகுதியில் பொதுமக்களுக்கான விழிப்புணர்வுக் கருத்தரங்கு நடைபெற்றது.
அத்துடன் 31.06.2024 ஆம் திகதி
கல்முனை தூய
காற்றைப் பேணுதல் அதாவது
காற்று
மாசுபடுவதைத் தடுத்தல் செயற்பாடாக கல்முனை வாகனப்
புகைப்
பரிசோதனை நிலையத்திற்கு முன்னால் வீதிகளில் பயணம்
செய்கின்ற வாகனங்களில் சுத்தமான காற்றைப் பேணுவோம், சூலலைப் பராமரிப்போம், நம்
சுவாசத்தைப் பேணுவோம் என்ற
வாசகங்கள் அடங்கிய ஒட்டிகள் வாகனங்களில் ஒட்டப்பட்டது. மேற்படி செயற்பாடுகள் யாவும்
சுற்றாடல் முன்னோடி அம்பாறை மாவட்ட
இணைப்பாளர் புஸ்பராஜினி செவ்வேட்குமரன் ஒழுங்கமைப்பில் கல்முனை சூழல்
நேயன்
அமைப்பின் அனுசரணையுடன் பிரதேச
செயலக
அதிகாரிகளும், மத்திய
சுற்றாடல் துறை
அதிகாரிகளும் பிரதேச
சுற்றாடல் படையணி
மாணவர்களும், சுற்றாடல் முன்னோடிப் பொறுப்பாசிரியர்களும் இணைந்து மேற்படி செயற்பாடுகளில் ஈடுபட்டனர்.
, கல்முனையில் உலக சுற்றாடல் தின வாரம் 30.05.2024 தொடக்கம் 05.06.2024 வரைக்கும் கொண்டாப்படுகிறது.








