எரிபொருள் விலைகளை குறைக்க முடியாமல் போனது ஏன் ? இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் விளக்கம்
எரிபொருள் விலைகளை குறைக்க முடியாமல் போனது ஏன் ? இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் விளக்கம்

எரிபொருள் விநியோக செயல்முறை தொடர்பி;ல் ஏனைய நிறுவனங்களுடன் செய்துகொண்டுள்ள உடன்படிக்கைகள் காரணமாக எரிபொருள் விலைகள் குறித்து சுயாதீனமாக முடிவெடுக்க முடியாத நிலை காணப்படுவதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டிஜே ராஜகருண தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது
-விலைகள் உரிய சூத்திரமின்றி தீர்மானி;க்கப்படும்போது அரசியல் ஆதாயங்களை அடிப்படையாகவைத்தே அவை தீர்மானிக்கப்படுகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் வந்ததும் விலைகள் குறைக்கப்பட்டு பின்னர் மாற்றப்படும்,இதன் காரணமாக விலைகளை விட குறைவாக எரிபொருளை விற்பனை செய்ததால் ,இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அரசவங்கிகளிற்கு 2 பில்லியன் கடன்செலுத்தவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
எனினும் விலை சூத்திரம் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டதினால் கடந்த வருடம் 120 பில்லியன் இலாபம் கிடைத்தது இந்தவருடம் 27 பில்லியன் இலாபம் கிடைத்துள்ளது.
அரசியல் தலையீடு மற்றும் உரிய முiயை உரிய விதத்தில் நடைமுறைப்படுத்தாமை காரணமாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தினால் உரிய முறையில் நிர்வகிக்க இயலாது என்ற எண்ணம் காணப்பட்டது, இதனால் நாட்டிற்குள் ஏனைய நிறுவனங்கள் அழைக்கப்பட்டன இதனால் நாங்கள் தற்போது சுயாதீனமாக செயற்பட முடியாத நிலையில் உள்ளோம்.
சந்தையில் ஏனைய நிறுவனங்கள் காணப்படுகின்றன,அந்த நிறுவனங்களுடன் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையின் கீழ் 2022 முதல் அந்த நிறுவனங்களும் எரிபொருள் சூத்திரத்தை பயன்படுத்துகின்றன.
வலுசக்திஅமைச்சும் நிதியமைச்சும் இறுதியாக தலையிட்டு இந்த விலை சூத்திரத்தின் கீழ் விலைகளை தீர்மானித்தன.
இந்த மாதத்திற்கான விலை இவ்வாறே தீர்மானிக்கப்பட்டது.இதன் காரணமாக 95 ஒக்டேன் பெட்ரோல் சுப்பர் டீசல் ஆகியவற்றின் விலைகளை உலகசந்தை விலைகளில் ஏற்பட்ட வீழ்ச்சிக்கு ஏற்ப குறைக்க முடிந்தது.ஏனைய நிறுவனங்களின் தலையீடு இல்லாவிட்டால் சுயாதீனமாக முடிவெடுக்க முடிந்திருந்தால் நாங்கள் பல எரிபொருள்களின் விலைகள் குறித்து தீர்மானித்திருப்போம்.








