கலை, கலாசாரம்

யாழில் வீடொன்றில் இளைஞன் மீது இராண்டாம் முறை வாள்வெட்டு

[ad_1]

யாழ்ப்பாணம் – தாவடி பகுதியில் கடந்த முதலாம் திகதி (1) இரவு இளைஞன் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தாவடி தெற்கு பத்திரகாளி கோவில் பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் இரவு 9:30 மணி அளவில் உள் நுழைந்த மர்ம நபர்கள், இளைஞன் மீது வாள் வெட்டினை நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவத்தில் 22 வயதான இளைஞன் கையில் வாள்வெட்டு தாக்குதலுக்கு உள்ளாகி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் .

நான்கு பேர் கொண்ட குழுவே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக பாதிக்கப்பட்ட இளைஞன் சுண்ணாகம் பொலிஸ் நிலையத்தில் வழங்கிய முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னரும் கடந்த வருடம் குறித்த இளைஞன் மீதும் தாயார் மீதும், தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இந்த வாள்வெட்டு தாக்குதல் ஏன் நடத்தப்பட்டது என்பது தொடர்பில் இதுவரை தெரியவராத நிலையில், மேலதிக விசாரணைகளை சுன்னாகம் குற்றத் தடுப்பு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்

[ad_2]
Lankafire

Back to top button