கலை, கலாசாரம்

கடந்த 24 மணி நேரத்தில் வீதி விபத்துக்களில் சிக்கி 4 பேர் பலி !

கடந்த 24 மணி நேரத்தில் நாட்டின் பல பகுதிகளில் ஏற்பட்ட வீதி விபத்துக்களில் சிக்கி 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

உப்புவெளி, வெலிப்பன்ன, கேகாலை மற்றும் மீட்டியாகொட ஆகிய இடங்களில் இந்த விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

உப்புவெளி, கிளிகுஞ்சிமலை சந்தி பகுதியில் மோட்டார் சைக்கிள் லொறியுடன் மோதிய விபத்தில் 39 வயதுடைய மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்து திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

மேலும், வெலிப்பன்ன லெவ்வந்துவ சந்தியில் வீதியைக் கடக்க முற்பட்ட 62 வயதுடைய பெண் ஒருவர் லொறி ஒன்றில் மோதியதில் படுகாயமடைந்து களுத்துறை நாகொட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, கேகாலை பல்லப்பான பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் ஒன்றின் மீது இராணுவ லொறி மோதியதில் 66 வயதுடைய மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, மீட்டியாகொட வெருல்லான பிரதேசத்தில் வீதியைக் கடந்த 78 வயதுடைய நபர் ஒருவர் முச்சக்கரவண்டி மோதியதில் படுகாயமடைந்து பலப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

, கடந்த 24 மணி நேரத்தில் வீதி விபத்துக்களில் சிக்கி 4 பேர் பலி !

Back to top button