கலை, கலாசாரம்

ஓய்வுபெற்ற ஆசிரியர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு!

மொனராகலை, தம்பகல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக தம்பகல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் கடந்த 22 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.

மொனராகலை, தம்பகல்ல பகுதியில் வசிக்கும் 73 வயதுடைய ஓய்வுபெற்ற ஆசிரியரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவரது மூத்த மகன் சில காலங்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ள நிலையில் மகனின் இழப்பைத் தாங்கிக்கொள்ள முடியாமல் இவ்வாறு உயிரை மாய்த்துக் கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பகல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

, ஓய்வுபெற்ற ஆசிரியர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு!

Back to top button