ஒரே பெயரினால் மாணவனுக்கு நேர்ந்த விபரீதம் : வைத்தியசாலையில் அனுமதி !

பொலன்னறுவை, மெதிரிகிரிய பிரதேசத்தில் அதிபரினால் தாக்கப்பட்டு காயமடைந்த மாணவர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
மெதிரிகிரிய பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் மற்றுமொரு மாணவனின் தலையில் பலமாக தாக்கி காயப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பில் அறிந்து கொண்ட பாடசாலை அதிபர் தாக்குதலை மேற்கொண்ட மாணவனை தனது அறைக்கு அழைத்து வருமாறு கூறியுள்ளார்.
இதன்போது, தாக்குதலை மேற்கொண்ட மாணவனின் பெயருக்குச் சமனான பெயரைக் கொண்ட மற்றுமொரு மாணவரொருவர் அதிபரின் அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
இதன்போது, அதிபர் மாணவனின் முதுகு மற்றும் கன்னம் பகுதிகளில் பலமாகத் தாக்கி காயப்படுத்தியுள்ளார்.
இதனையடுத்து, இந்த மாணவன் வீட்டிற்குச் சென்று இது தொடர்பில் தனது பாட்டியிடம் தெரிவித்துள்ளார்.
பின்னர், மாணவன் இரவு உறங்கிக் கொண்டிருக்கும் போது திடீரென தலை வலிப்பதாகக் கூறி சுகயீனமடைந்துள்ளார்.
இதனையடுத்து, மாணவன் மெதிரிகிரிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாணவனின் பாட்டி தெரிவித்துள்ளார்.
, ஒரே பெயரினால் மாணவனுக்கு நேர்ந்த விபரீதம் : வைத்தியசாலையில் அனுமதி !








