இலங்கை செய்திகள்

ஒருவரை பலிகொண்ட பாரவூர்திகள்… அநுராதபுரத்தில் சம்பவம்…

ஒருவரை பலிகொண்ட பாரவூர்திகள்... அநுராதபுரத்தில் சம்பவம்...

ஒருவரை பலிகொண்ட கோர விபத்தானது அநுராதபுரம் (Anuradhapura) பாதெனிய பிரதான வீதியில் தம்புத்தேகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. 

குறித்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளதாக தம்புத்தேகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்தானது இன்று (14) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

ஒருவரை, பலிகொண்ட, பாரவூர்திகள், அநுராதபுரத்தில்

தம்புத்தேகமவிலிருந்து அநுராதபுரம் நோக்கிப் பயணித்த சிறிய லொறி ஒன்றும் அநுராதபுரத்திலிருந்து தம்புத்தேகம நோக்கிப் பயணித்த லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது சிறிய லொறியில் பயணித்த நபரொருவரே உயிரிழந்துள்ளார்.

காயமடைந்தவர்களில் ஒருவர் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மற்றைய நால்வரும் தம்புத்தேகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

 

Back to top button