கலை, கலாசாரம்

ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது !

ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் நேற்று மாலை (20) கைதுசெய்யப்பட்டுள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.

25 வயதுடைய மஹியங்கனை சொரபோர பகுதியை சேர்ந்தவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

தெஹிவளை பகுதியிலிருந்து மஹியங்கனை மற்றும் அதனை அண்மித்த பகுதிகளுக்கு ஐஸ் போதைப்பொருள் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய, மஹியங்கனை பொலிஸார் சுற்றிவளைப்பில் ஈடுபட்டபோதே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

சந்தேக நபர்களிடமிருந்து 15 கிராம் 800 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள், 10 ஆயிரம் ரூபாய் பணம், கையடக்க தொலைபேசி கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விசாரணையின் பின்னர், சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

அத்தோடு, சந்தேக நபர் மீது போதைப்பொருள் சம்பந்தப்பட்ட வழக்குகள் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

, ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது !

Back to top button