கலை, கலாசாரம்

எரிவாயு விலை தொடர்பில் அறிவிப்பு !

மாதாந்த விலைத் திருத்தத்திற்கமைய, லிட்ரோ சமையல் எரிவாயு விலைகளில் மாற்றம் மேற்கொள்ளப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், எரிபொருள் விலைச்சூத்திரத்திற்கு அமைய, ஓகஸ்ட் மாதம் எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்படாது என, லிட்ரோ நிறுவனத் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இறுதியாக கடந்த ஜூலை 03ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ (Litro) சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் பின்வருமாறு திருத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

12.5kg: ரூ. 3,790 இலிருந்து ரூ. 3,690 ஆக ரூ. 100 இனால் குறைப்பு

5kg: ரூ. ரூ. 1,522 இலிருந்து ரூ. 1,482 ஆக ரூ. 40 இனால் குறைப்பு

2.3kg: ரூ. 712 இலிருந்து ரூ. 694 ஆக ரூ. 18 இனால் குறைப்பு

, எரிவாயு விலை தொடர்பில் அறிவிப்பு !

Back to top button