கலை, கலாசாரம்

எனக்கு தரப்பட்டுள்ள இந்த பொறுப்பை செவ்வனே செய்வேன் !

நாட்டின் சுற்றாடல் துறைசார்ந்த பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கும் தேவைகளுக்கும் தீர்வு காணும் வகையில் எனக்கு தரப்பட்டுள்ள இந்த பொறுப்பை செவ்வனே செய்வேன் என வர்த்தக மற்றும் சுற்றாடல்துறை இராஜாங்க அமைச்சர் ச.வியாழேந்திரன் தெரிவித்தார்.

இன்று (25) அவரது அமைச்சு அலுவலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இதனை ​தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எனக்கு கடந்த காலத்தில் தரப்பட்ட அமைச்சு சார் பொறுப்புக்களை முடிந்தளவு நான் சிறப்பாக செய்திருக்கின்றேன். அதற்கு அனைத்து உத்தியோகத்தினரினதும் ஒத்துழைப்புக்களும் பங்களிப்புக்களும் எனக்கு சிறப்பாக கிடைத்தன. எனவே, அவற்றை நாங்கள் எதிர்காலத்திலும் சிறப்பாக செய்வோம் என்ற நம்பிக்கை இருக்கின்றது.

அதேவேளை, வடக்கு – கிழக்கை பொறுத்த வரையில் சுற்றாடல் சார் பிரச்சினைகள் இருக்கின்றன. எனவே, ஜனாதிபதி இந்த விடயங்கள் குறித்து கூடுதல் கவனம் செலுத்துமாறு கூறியிருக்கின்றார் என தெரிவித்தார்.

, எனக்கு தரப்பட்டுள்ள இந்த பொறுப்பை செவ்வனே செய்வேன் !

Back to top button