கலை, கலாசாரம்
ஒப்படை சமர்ப்பிக்க தவறியதால் மாணவனை தாக்கிய ஆசிரியர் : மாணவன் பொலிஸில் முறைப்பாடு !

ஒப்படை சமர்ப்பிக்கத் தவறியதால் தன்னை ஆசிரியர் மூர்க்கத்தனமாக தாக்கினார் என பாடசாலை மாணவன் ஒருவனால் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோப்பாய் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவனே முறைப்பாடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
பாடம் ஒன்றுக்கான ஒப்படையை சமர்ப்பிக்க தவறியமையால் ஆசிரியர் தன்னை தாக்கியதாக முறைப்பாட்டில் தெரிவித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகளில் கோப்பாய் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
, ஒப்படை சமர்ப்பிக்க தவறியதால் மாணவனை தாக்கிய ஆசிரியர் : மாணவன் பொலிஸில் முறைப்பாடு !









