கலை, கலாசாரம்

கிராம உத்தியோகத்தர்களின் தீர்மானமிக்க கலந்துரையாடல் இன்று !

சேவை யாப்பு உள்ளிட்ட தமது கோரிக்கைகள் தொடர்பில் தீர்க்கமான கலந்துரையாடல் இன்று (01) இடம்பெறவுள்ளதாக அரச கிராம உத்தியோகத்தர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி செயலணியின் பிரதானி சாகல ரத்நாயக்கவுடன் இந்த கலந்துரையாடல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அதன் தேசிய அமைப்பாளர் சுமித் கொடிகார தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், உரிய கலந்துரையாடலின் ஊடாக தமது பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வு கிடைக்காவிடின் தொடர்ச்சியான வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் சுமித் கொடிகார குறிப்பிட்டுள்ளார்.

, கிராம உத்தியோகத்தர்களின் தீர்மானமிக்க கலந்துரையாடல் இன்று !

Back to top button