சர்வதேச செய்திகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் நிராகரிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் நிராகரிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் நிராகரிப்பு

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனு நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ள உள்ளுராட்சி மன்றங்களுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகளை நாளை (03) வரை இடைநிறுத்துமாறு உரிய தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவிக்குமாறு மேன்முறையீட்டு நீிதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவர் மொஹமட் லஃபர் தாஹிர் மற்றும் கே.பி. பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவை இன்று (02)  பிறப்பித்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக கொழும்பு மாநகர சபையின் சார்பிலும்  பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களினால் இந்த மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, 2025 உள்ளூராட்சித் தேர்தல் வேட்புமனு நிராகரிப்பு வழக்கை இன்று விசாரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்புச் சான்றிதழ் மூலப்பிரதிகளை சமர்ப்பித்த வேட்பாளர்களின் வேட்புமனுக்களை ஏற்குமாறு தேர்தல் ஆணைக்குழுவுக்கு  உத்தரவிட்டுள்ளது.

Back to top button