இலங்கை செய்திகள்
உயிருக்கு போராடிய வெளிநாட்டவர்கள்..! பொலிஸார் மீட்பு…
உயிருக்கு போராடிய வெளிநாட்டவர்கள்..! பொலிஸார் மீட்பு...

உயிருக்கு போராடிக்கொண்டிருந்த இரண்டு வெளிநாட்டுப் பிரஜைகள் பொலிஸ் உயிர்காப்பு பிரிவினரால் காப்பாற்றப்பட்டுள்ளதாக அஹுங்கல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
காலி மாவட்டத்தில் அஹுங்கல்ல கடலில் மூழ்கிய வெளிநாட்டு பிரஜைகளே இவ்வாறு மீட்கப்பட்டனர்.
இந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (10) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
ருமேனியா நாட்டைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞனும், உக்ரைன் நாட்டைச் சேர்ந்த 30 வயதுடைய யுவதியுமே காப்பாற்றப்பட்டுள்ளனர்.

இரு வெளிநாட்டுப் பிரஜைகளும் அஹுங்கல்ல கடலில் நீராடிக் கொண்டிருந்துள்ள நிலையில் திடீரென நீரில் மூழ்கியுள்ளனர்.
இதன்போது, அங்குக் கடமையிலிருந்த பொலிஸ் உயிர்காப்பு பிரிவினர் இந்த இரு வெளிநாட்டுப் பிரஜைகளையும் காப்பாற்றி அவர்களுக்கு முதலுதவி அளித்துள்ளதாக அஹுங்கல்ல பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.








