
உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை!..
ஆனந்த சுதாகரன் மற்றும் மொறிஸ்
கடந்த 10/23 இலங்கை ஊடகங்களில் அதிகமாக பேசப்பட்ட விடயம் தொடர்பில் கவனம் செலுத்தி அதனைத் தொடர்ந்து திரைமறைவில் நடக்கும் சில மர்மங்கள் குறித்து இந்த கட்டுரையில் ஆராயலாம்..
கடந்த 10 ஆம் மாதம் 23 ஆம் திகதியன்று இலங்கை தேசத்தில் மட்டும் அன்றி உலகம் முழுவதும் பேசப்பட்ட விடயம் தான். அருகம்பே குண்டு தாக்குதல் குறித்த புலனாய்வு எதிர்வு கூறல்…
அதனைத் தொடர்ந்து இலங்கையில் இருக்கும் இஸ்ரேலிய யூதர்கள் குறித்த பாதுகாப்பு உத்தரவாதம் மற்றும் அவர்களது இலங்கை செயற்பாடுகளை குறித்தும் அதிகம் பேசப்படும் நிலை காணப்பட்டது…
அதேநேரம் இலங்கையில் மீண்டும் முஸ்லிம்கள் குறித்த ஒரு விதமான சந்தேக கண்ணோட்டம் ஏற்படுத்தும் வகையில் கூட சில ஊடகங்கள் மூலம் கருத்துருவாக்கம் செய்யப்பட்டது…
அதன் பின்பு குறித்த தாக்குதலை நடத்த ஒப்பந்தம் ஒன்றை செய்துள்ளார் என்று கூறி ஒருவர் யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார் அத்துடன் முஸ்லிம்கள் மீதான வன்மப் பார்வை தமிழர்கள் மீது திரும்பியது… அதுவும்.. முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கு எதிராக புலனாய்வாளர்கள் தங்கள் பார்வையை திருப்பிக் கொண்டு இருக்கும் தற்போதைய நிலை பற்றி மேலும் காணலாம்…
ஆம்.
குறித்த நபரை தொடர்ந்து இன்னும் ஒரு நபரும் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடுப்பு பிரிவினர் மூலம் தடுத்து வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்…
இதில் கவணிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால்..
குறித்த கைது செய்யப்பட்ட இருவரும் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் என்று சந்தேகத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் ஆகும். அதேநேரம் குறித்த இருவரும் சுமார் 15 வருடங்கள் தொடர்ந்து பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து நீதி மன்றம் ஊடாக விடுவித்து விடுதலை செய்யப்பட்ட நபர்கள் ஆகும். இவர்கள் இருவரும் நெடுநாள் சிறை இருப்பின் பின் விடுதலைப் பெற்ற நபர்கள் என்ற அடிப்படையில் குறித்த விடயம் தொடர்பில் இவர்களின் பங்களிப்பு வழங்கி வைக்க பட்டிருக்கிறது என்று கூறி நிற்கும் குற்றச்சாட்டு உண்மையில் ஏற்புடையதாக இல்லை..
காரணம் நீண்ட காலமாக சிறையில் இருந்து வெளியே வந்த ஒரு நபரின் மன நிலை மீண்டும் தனது பழைய இருள் நிறைந்த வாழ்க்கையை நாட ஒரு போதும் விருப்ப மாட்டார்கள்.
சரி எப்படி இவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது என்று ஆராய்ந்து பார்த்தால்..
சிறையில் நடத்தப் பட்ட சோதனை நடவடிக்கை ஒன்றில் கைப் பற்றிய தொலைபேசி மூலம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் தான் குறித்த சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
ஆனந்த சுதாகரன்+மொரிஸ்
மேலேயுள்ள இரண்டு பெயர்கள் குறித்து அனைத்து ஈழத்தமிழர்களும் அறிந்த விடயமாகும்..
இவர்கள் இருவரிடமும் சிறையில் நடத்தப் பட்ட சோதனை நடவடிக்கையின் போது கை பேசிகள் மற்றும் சிம் அட்டைகள் கைப் பற்றிய தை தொடர்ந்து இந்த இரண்டு குறித்த சிம் அட்டைகள் மற்றும் தொலைபேசி தரவுகளின் அடிப்படையில் மேற்கொண்டு வந்த விசாரணைகளில் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் சுன்னாகம் பகுதியில் இருந்த நபர்கள் மீது பார்வை திரும்பி இருந்த போது தான் 10/23 குண்டு தாக்குதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது தருணம் பார்த்துக் கொண்டு இருந்த படியே இரண்டு நபர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள். தற்போது வரை பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் பிரிவு 9/1 க்கு அமைவாக 90நாட்கள் தடுத்து வைக்கப்பட்டு இருக்கிறார்கள்..
இது இவ்வாறு இருக்க கைப் பேசிகள் வைத்து இருந்த சிறை கைதிகள் இருவர் மீதும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள சமீபத்திய சம்பவம் ஒன்று கூட பதிவாகியுள்ளது… அதாவது
பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்ட காலமாக சிறையில் தண்டனை அனுபவித்து கொண்டு இருக்கும் செல்வராசா கிருபாகரன் அல்லது அலியார் முஹம்மது நிஸ்தார் அல்லது லாபீர் அல்லது கஜன் அல்லது மொறீஸ் என்று அறியப்படும் முன்னாள் தமிழீழம் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினரும் அதேநேரம் மற்றும் ஒரு நபரான ஆனந்த சுதாகரன் எனப் படும் ஆயுள் கால சிறைத் தண்டனை வழங்கப்பட்டு தனது ஒவ்வொரு பொழுதுகளிலும் மரணம் தன்னை அனைத்து கொண்டு செல்லாதோ என்று தவித்துக் கொண்டு இருக்கும் ஒரு தகப்பனாக தனது பிள்ளைகள் அநாதைகள் ஆக இருக்கும் நிலையில் தான் சிறையில் இருந்து தனது பிள்ளைகளை என்னிக் கொண்டு ஏங்கி கொண்டு இருக்கும் நிலையில்.. வாழ்ந்துவரும்
குறித்த இருவருக்கும் எதிராக இலங்கை பாதுகாப்பு தரப்பினர் மற்றும் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் மூலமாக உடனடியாக நடைமுறை படுத்த படும் வகையில் மொறிஸை எம்பிலிபிட்டிய சிறைச்சாலைக்கும் ஆனந்த சுதாகரனை தும்பரை சிறைச்சாலைக்கு உடணடியாக மாற்றப்பட்டு அங்கு தனி செல்களில் அடைக்கப்பட்ட நிலையில் மிகவும் பரிதாபமான நிலைக்குள் ஆழ்த்தி உள்ளது எமது தேடலில் கண்டு பிடிக்க பட்டது..
அங்கே அவர்களது உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை கூட காணப்படுகிறது..
10/23 குண்டு தாக்குதல் பின்னணி யில் இவர்களது தொடர்பு இருப்பதாக தற்போது புதிய கோணத்தில் விசாரணை முன்னெடுத்துச் செல்லும் வகையில் செயற்பாடுகளை வடிவமைத்து வரும் பின்புலத்தில் இருந்து செயல்பட்டு வருகிறது யார் என்று பார்த்தால் பயங்கரவாத விசாரணைப் பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணை பிரிவின் இயக்குனராக கடந்த 15ஆண்டுகளுக்கு மேலாக பணியில் ஈடுபட்டு வரும் மஹிந்தவின் அதி தீவிர நம்பிக்கை யாளராக இருந்து வரும் அல்விஸ் என்று அறியப்படும் அதிகாரி மூலமாக குறித்த நகர்வுகளை மேற்கொண்டு வரும் சுரேஸ் சலே என்ற நபரே ஆலோசனைகள் வழங்கி வருகின்றது தெரியவருகிறது. இவர் கடந்த காலத்தில் பல்வேறு குற்றச் செயல்களில் நெருக்கமான தொடர்பு கொண்ட நபராக பேசப் பட்ட நபர் ஆகும் அதாவது உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல் தொடர்பிலும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு உட்பட உலகின் பயங்கரவாத அமைப்புகளுக்கு நேரடியாக தொடர்புடைய நபராக கூட அறியப்பட்ட நண்பராக கருதப்படுகிறது .
குறித்த இரண்டு கைதிகள் மற்றும் புதிதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் இரண்டு நபர்கள் மூலம் முன்னெடுக்க படுகின்ற கருத்துருவாக்கம் யாதெனில். இஸ்ரேலிய அரசுக்கும் பாலஸ்தீனிய அரசுக்கும் இடையில் இடம்பெற்று வருகிற யுத்தத்தை பயன்படுத்தி இலங்கையில் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தும் வகையில் முன்னாள் விடுதலைப் புலிகளின் பெயரை பயன்படுத்தி அதன் மூலமாக இலாபம் ஈட்டும் வகையிலான இராஜதந்திர ரீதியான அரசியல் ரீதியான நகர்வை மேற்கொண்டு. உலக அரங்கில் இருந்து விடுதலைப்புலிகள் இயக்கத்தின் ஆதரவு தரப்பினரை அவர்களுக்கு எதிராக திசை திருப்பும் வகையிலும். அதேநேரம் மேற்குலக நாடுகளில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் தடை நீக்க நடவடிக்கைகள் நிறுத்தம் செய்யப்பட்டு விடுதலைப் புலிகள் இயக்கத்தின் செயற்பாடுகளை சர்வதேச பயங்கரவாத சக்திகளுக்கு ஆதரவாக மாற்றி வருகின்றார்கள் என்ற ஒரு பார்வையை ஏற்படுத்தவும் குறித்த விடயங்களில் அப்பாவி தமிழர்களை இலக்கு வைத்து தங்கள் நகர்வுகளை மேற்கொண்டு வருகிறது உறுதியாக வெளிப்படுத்த படுகிறது.
பிள்ளையான் சேனல் 4 விடயம் தொடர்பில் விசாரணை செய்யும் விதமாக புலனாய்வு பிரிவு மூலமாக அழைப்பு விடுக்க பட்ட விடயம் கூட நம்பிக்கை இல்லாத நிலையில் இருப்பது தான் உண்மை.. எது எப்படியோ மீண்டும் விடுதலைப் புலிகளின் பெயரை பயன்படுத்தி எதையாவது செய்ய வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு இருக்கும் மஹிந்தவின் சகா சுரேஷ் சலேவின் கை பாவை பிரஸன்ன டீ அல்விஸ் பயங்கரவாத தடுப்பு பிரிவின் இயக்குனர். போன்ற தரப்பினருடைய காய் நகர்த்தல் மூலம் மொறிஸ் மற்றும் ஆனந்த சுதாகரன் ஆகியோர் மர்மமான முறையில் உயிர் பிரியும் அபாயம் உள்ளது என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது.
நன்றி




