உயர்தர பரீட்சையில் சிறந்த சித்திகளை பெற்ற வாழைச்சேனை இந்துக் கல்லூரி மாணவர்களுக்கு கௌரவிப்பு ! !


(ரூத் ருத்திரன்)
2023ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தர உயர் தர பரீட்சைக்கு வாழைச்சேனை இந்துக் கல்லூரியில் இருந்து தோற்றிய மாணவர்களில் 47 மாணவர்கள் பல்கலைக் கழகம் செல்வதற்கு தெரிவாகியுள்ளனர்.
இவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இன்று (7) வாழைச்சேனை இந்துக் கல்லூரி தேசிய பாடசலையின் அதிபர் எ.ஜெயக்குமணன் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வினை கல்லூரியின் அதிபர்,ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
இதன்போது மாணவர்கள் பாண்டு வாத்திய இசையுடன் கல்லூரியின் விழா மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.பின்னர் மலர் மாலை மற்றும் மலர் கொத்துக்கள் வழங்கி கரகோசத்துடன் வரவேற்கப்பட்டு கொரவிக்கப்பட்டனர்.
தொடர்ந்து அதிதிகள் மங்கள விளக்கேற்றலுடன் மதப் பிரார்த்தனைகளும் நடைபெற்றது.
நிகழ்வில் கலந்து கொண்ட கல்லூரியின் அதிபர் உட்பட கல்குடா வலய கல்வித் திணைக்கள அதிகாரிகளினால் மாணவர்கள் பரீட்சையில் சித்தி பெற்றமையினை பாராட்டி தங்களது பாராட்டுக்கள் தெரிவித்ததுடன் மாணவர்களின் பெற்றோர்கள்,கல்வி புகட்டிய ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகம் ஆகியோர்களுக்கும் தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
விஞ்ஞானப் பிரிவில் 11 பேரும் அதில் ஒருவர் மருத்துவத்திற்கும் கணிதப்பிரிவில் 12 பேரும் அதில் 3 பேர் பொறியியல் பிரிவிற்கும்,தெரிவாகியுள்ளனர்.வர்த்தக முகாமைத்துவத்தில் 6 பேரும் கலைப் பிரிவில் 8 பேரும் தொழில் நுட்ப பிரிவில் 10 பேரும் சித்தி பெற்று பல்கலைகம் செல்ல தகுதி பெற்றுள்ளனர்.
, உயர்தர பரீட்சையில் சிறந்த சித்திகளை பெற்ற வாழைச்சேனை இந்துக் கல்லூரி மாணவர்களுக்கு கௌரவிப்பு ! !







