இலங்கை செய்திகள்
2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் (PCoI) அறிக்கை காணாமல் போனது
நாமல் ராஜபக்ஷ கோரிக்கை

2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் (PCoI) அறிக்கை காணாமல் போனது குறித்து விசாரணை நடத்துமாறு SLPP தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இத்தாக்குதல்கள் தொடர்பாக இங்கிலாந்தின் சனல் 4 வெளியிட்ட குற்றச்சாட்டுகளை ஆராய்ந்த அறிக்கை காணவில்லை என கொழும்பு உயர்மறைமாவட்டத்தின் தொடர்பாடல் பணிப்பாளர் சிரில் காமினி பெர்னாண்டோ அறிவித்துள்ளார்.
“ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களின் கண்டுபிடிப்புகள் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை காணாமல் போயுள்ளது என்பதைப் படிப்பது கவலை அளிக்கிறது. உண்மையாக இருந்தால், அரசாங்கம் உடனடியாக அதன் இருப்பிடத்தை ஆராய்ந்து வெளியிட வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.








