கலை, கலாசாரம்

உகந்தைமலை முருகன் ஆலய ஆடிவேல் விழா மகோற்சவம் நாளை ஆரம்பம்!



( வி.ரி.சகாதேவராஜா)

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற உகந்தைமலை முருகன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் நாளை  6 ஆம் தேதி கொடியேற்ற நிகழ்வுடன் ஆரம்பமாகின்றது என்று ஆலய வண்ணக்கர் சுதுநிலமே திஸாநாயக்க சுதா தெரிவித்தார்.

உகந்தை மலை ஸ்ரீ முருகன் ஆலய கொடியேற்றம் எதிர்வரும் 06 ஆம் தேதி ஆலயபிரதம குரு சிவசிறி க.கு.சீதாராம் குருக்கள் தலைமையில் நடைபெற இருக்கின்றது.

கொடியேற்றம் தொடங்கி தொடர்ச்சியாக16 நாட்கள் திருவிழாக்கள் இடம்பெற்று எதிர்வரும் 22ஆம் தேதி சமுத்திரத்தில் தீர்த்த உற்சவம் இடம் பெறும்.

உற்சவ காலங்களில் போக்குவரத்து மற்றும் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இது இவ்வாறு இருக்க கதிர்காமத்துக்கான உகந்தைமலை ஊடான காட்டுப்பாதையில் பயணிக்கும் பக்தர்களின் எண்ணிக்கை இம்முறை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

, உகந்தைமலை முருகன் ஆலய ஆடிவேல் விழா மகோற்சவம் நாளை ஆரம்பம்!

Back to top button