இலங்கை செய்திகள்

ஈரானியருக்கு நேர்ந்த சோகம்..! ஓடும் ரயிலில் சம்பவம்…

ஈரானியருக்கு நேர்ந்த சோகம்..! ஓடும் ரயிலில் சம்பவம்...

ஈரானியருக்கு செல்ஃபி எடுக்க முற்பட்ட வேளை கவலைக்குரிய சம்பவமொன்று நேர்ந்துள்ளது.

எல்ல – கொழும்பு  ரயிலில் செல்ஃபி எடுக்க முற்பட்ட ஈரானிய சுற்றுலாப் பயணி ஒருவர் ஒஹிய – இடல்கஸ்ஹின்ன ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள  கம்பத்தில் மோதி காயமடைந்துள்ளார்.

இதன்காரணமாக 37 வயதுடைய பெண் சுற்றுலாப் பயணி ரயிலில் இருந்து தவறி விழுந்து பலத்த காயங்களுடன் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஈரானியருக்கு, நேர்ந்த, சோகம், சம்பவம்

நானுஓயாவிற்கு மக்கள் குழுவுடன் சென்று திரும்பிக்கொண்டிருந்த குறிப்பிட்ட பெண், புகையிரதத்தின் மிதி பலகையில் செல்ஃபி எடுக்க முற்பட்ட போதே விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த சுற்றுலாப் பயணி அதே ரயிலில் நானுஓயாவுக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

Back to top button