இலங்கை செய்திகள்

இஸ்ரேலிலுள்ள இலங்கையர்களின் பாதுகாப்பில் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றோம் – இலங்கை தூதுவர்

இஸ்ரேலிலுள்ள இலங்கையர்களின் பாதுகாப்பில் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றோம் - இலங்கை தூதுவர்

இஸ்ரேலிலுள்ள இலங்கையர்கள் தொடர்பில் அவர்களின் உறவினர்கள் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை எனவும் இலங்கை தூதரகம் அவர்களின் பாதுகாப்பு தொடர்பில் தீவிரமாகக் கண்காணித்து வருவதாகவும் இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களால் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட டெல் அவிவ் சர்வதேச விமான நிலையத்தில் விமானச் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இலங்கையிலிருந்து இஸ்ரேலுக்கு வர விரும்பும் பயணிகளும், இஸ்ரேலிலிருந்து இலங்கை செல்ல விரும்பும் பயணிகளும் விமான நிலையத்திற்குச் செல்வதற்கு முன் தங்கள் பயணத்திற்குத் தேவையான விமானம் இயக்கப்படுகிறதா என்பதைச் சரிபார்க்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Back to top button