கலை, கலாசாரம்

இலங்கை விமானப்படை தளபதியின் தலைமையில் புதிய கடேட் அதிகாரிகள் நியமனம் !

  

வானின் பாதுகாவலர் என்றழைப்படும் இலங்கை விமானப்படையானது நாட்டின் பாதுகாப்பை எப்போதும் உறுதிசெய்துகொண்டு இருக்கிறது. அந்தவகையில் புதிய கடேட் அதிகாரிகள் விமானப்படையினுள் இணைத்துக்கொள்ளப்பட்டனர்.

இதன்போது இல. 78 மாணவர் அதிகாரி பாடநெறி (மருத்துவம், சட்டம், சிவில் பொறியியல், தகவல் தொழில்நுட்ப பொறியியல், ஏரோநாட்டிகல் மற்றும் பொது பொறியியல்) ஆகிய துறைகளிலும் மற்றும் இல . 35 கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக கேடட் அதிகாரி பாடநெறி (மருத்துவம்) துறையிலும் தெரிவான கடேட் அதிகாரிகள் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ அவர்களினால் புதிய அதிகாரிகளாக நியமிக்கப்பட்டனர் இந்த நிகழ்வு தியத்தலாவ விமானப்படை போர் பயிற்ச்சி பாடசாலையில் கடந்த 2024 ஜூலை 29ம் திகதி இடம்பெற்றது.

இந்த அதிகாரிகள் நியமன அணிவகுப்புக்கு பொறுப்பதிகாரியாக தியத்தலாவ போர் பயிற்சி பாடசாலையின் கட்டளை அதிகாரியான விங் கமாண்டர் கனிஷ்க ஜயசேகர தலைமைதாங்கினார். இதன்போது இல 78 மாணவர் அதிகாரி பாடநெறியில் 06 ஆண் அதிகாரிகள் மற்றும் 10 பெண் அதிகாரிகளும் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக இல 35 பாடநெறியில் 12 அதிகாரிகள் உற்பட 28 அதிகாரிகள் கடேட் அதிகாரிகளாக நியமனம்பெற்றனர்.

இந்த நிகழ்வில் விமானப்படை பதவிநிலை பிரதானி . பிரதி பதவிநிலை பிரதானி மற்றும் பணிப்பாளர்கள், தியத்தலாவ ஹவிமானப்படை தளத்தின் கட்டளை அதிகாரி , மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அங்கத்தவர்கள் பெற்றோர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

  

, இலங்கை விமானப்படை தளபதியின் தலைமையில் புதிய கடேட் அதிகாரிகள் நியமனம் !

Back to top button