இலங்கை செய்திகள்
இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க டொனால்ட் டிரம்பிற்கு வாழ்த்து!
இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க டொனால்ட் டிரம்பிற்கு வாழ்த்து!

ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டிய குடியரசுக் கட்சியின் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்பிற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வாழ்த்து தெரிவித்துள்ளார்.எக்ஸ் தளத்தில் அவர் இவ்வாறு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

புதிய அமெரிக்க நிர்வாகத்துடன் இணைந்து செயற்பட விரும்புவதாக அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.அமெரிக்காவின் 47ஆம் ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள ட்ரம்பிற்கு இதயபூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக ஜனாதிபதி அநுர தெரிவித்துள்ளார்.
மேலும், அமெரிக்க மற்றும் இலங்கை மக்களின் நலன்களுக்காக பொதுவான நோக்கங்களுக்காக இணைந்து செயற்பட எதிர்பார்ப்பதாக அவர் தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.








