கலை, கலாசாரம்

இலங்கையில் மீண்டும் ஊரடங்கு சட்டமா? பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு கூறிய தகவல்

[ad_1]

இலங்கையில் அடுத்த வாரம் ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு நடைபெறவுள்ளநிலையில் ஊரடங்கு சட்டத்தை பிறப்பிப்பது குறித்து சிந்திக்கவில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக தெரிவித்துள்ளார்.

ஊரடங்கை பிறப்பிப்பதற்கான ஏற்பாடுகள் திட்டங்கள் எதனையும் முன்னெடுக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்பு அமைச்சர் ( ஜனாதிபதி) வேண்டுகோள் விடுத்தால் மாத்திரமே ஊரடங்கை பிறப்பிப்போம் என அவர்தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்கு ஊரடங்கு உத்தரவை பிறப்பிப்பதற்கான அதிகாரம் உள்ளது,ஆனால் அதற்கான திட்டமிடல்களில் நாங்கள் ஈடுபடவில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இதுகுறித்த மோர்னிங்கின் கேள்விக்கு பொலிஸ்பேச்சாளர் கருத்துகூற மறுத்துள்ளார் எனினும் ஊரடங்கை பிறப்பிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கே உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

அவர் ஊரடங்கு அவசியம் என்றால் அதனை பிறப்பிக்கலாம் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

[ad_2]
Lankafire

Back to top button