இலங்கையில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு முடிவடைந்தது!

[ad_1]
இலங்கையில் 2024 ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு உத்தியோகபூர்வமாக இன்றையதினம் (21) மாலை 4.00 மணிக்கு நிறைவடைந்துள்ளது.
அதன்படி, வாக்குப் பெட்டிகள் மூடப்பட்டுள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கை விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, மொனராகலை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் தபால் வாக்குகளை எண்ணும் பணி ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மொத்தமாக 17,140,354 இலங்கையர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர், கம்பஹா மாவட்டத்தில் 1,881,129 வாக்காளர்கள் அதிகளவில் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
1,765,351 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களுடன் கொழும்பு மாவட்டம் இரண்டாவது இடத்தையும், குருநாகல் மாவட்டத்தில் 1,417,226 வாக்காளர்களும் உள்ளனர்.
வடக்கு மாகாணத்தில் மொத்தம் 899,268 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் இருந்தனர்.
நாடளாவிய ரீதியில் 13,421 வாக்களிப்பு நிலையங்களில் இன்று (21) காலை 7.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை வாக்களிப்பு இடம்பெற்றது.
Lankafire








