கலை, கலாசாரம்
இலங்கையின் ஜனாதிபதியாக அனுரகுமார திஸாநாயக்க தெரிவு!

[ad_1]
இலங்கையின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தியின் (NPP) ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
2024 ஜனாதிபதித் தேர்தலில் NPP தலைவர் அனுரகுமார திஸாநாயக்க வெற்றி பெற்றதாக தேர்தல்கள் ஆணைக்குழு இன்றையதினம் (22-09-2024) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
நேற்று (21-09-2024) நடைபெற்ற தேர்தலில் 42.31% வாக்குகளைப் பெற்று 55 வயதான திரு. திஸாநாயக்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை இரண்டாம் இடத்திற்குத் தள்ளி, தற்போதைய ரணில் விக்கிரமசிங்கவை மூன்றாவது இடத்திற்குத் தள்ளி ஜனாதிபதியாக வெற்றிபெற்றதாக ஆணைக்குழு தனது இணையத்தளத்தில் தெரிவித்துள்ளது.
Lankafire








