இலங்கை செய்திகள்

இறக்குமதி உணவுப் பொருட்கள் சிலவற்றின் வரிகள் அதிகரிப்பு!

இறக்குமதி உணவுப் பொருட்கள் சிலவற்றின் வரிகள் அதிகரிப்பு!

ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை நாட்டில் இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்கள் சிலவற்றின் வரிகள் அதிகரிக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி, ஒரு கிலோ சிவப்பு பருப்பு மற்றும் மஞ்சள் பருப்பு ஆகியவற்றிற்கு 25 ரூபா வரி  விதிக்கப்பட்டுள்ளது.

இறக்குமதி உணவுப் பொருட்கள் சிலவற்றின் வரிகள் அதிகரிப்பு!

மேலும், ஒரு கிலோ கிராம் மாசி மற்றும் அதற்குப் பதிலான பொருட்களுக்காக 302 ரூபா விசேட வர்த்தக பண்ட வரி விதிக்கப்பட்டுள்ளது.

எலும்பு நீக்கப்பட்ட மீன் மற்றும் பிற மீனின் இறைச்சியைத் தவிர, புதிய அல்லது உறைந்த மீன்கள் ஒரு கிலோவிற்கு 10% அல்லது 400 ரூபாய் என்ற உச்சபட்ச வரிக்கு உட்பட்டுள்ளது.

Back to top button