
பண்டாரகம, கிதேல்பிட்டிய பகுதியில் பாடசாலைக்கு முன்பாக இரண்டு லொறிகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் தம்பதி உட்பட ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக பண்டாரகம பொலிஸார் தெரிவித்தனர்.

கெஸ்பேவயிலிருந்து பண்டாரகம நோக்கி மூன்று பேருடன் பயணித்த லொறி ஒன்று எதிர்திசையில் தம்பதியுடன் பயணித்த லொறியுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தின் போது, இரு லொறிகளிலும் பயணித்த ஐந்து பேர் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பண்டாரகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.








