கலை, கலாசாரம்

இராமநாதன் அர்ச்சுனா மீதான வழக்குகள் செப்டம்பர் 11ம் திகதிவரை ஒத்திவைப்பு !

யாழ்ப்பாணம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னாள் பதில் அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனா மீதான வழக்குகள், எதிர்வரும் செப்டம்பர் 11 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

குறித்த வழக்குகள், சாவகச்சேரி நீதிமன்றில் நீதிபதி அ.யூட்சன் தலைமையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

வைத்தியர்களை தொலைபேசியில் அச்சுறுத்தியமை, பேசித் தொந்தரவு செய்தமை உள்ளிட்ட காரணங்களுக்காக, அர்ச்சுனா மீது, ஏனைய வைத்தியர்களால் தொடரப்பட்ட 5 வழக்குகளே, விசாரணைக்கு எடுக்கப்பட்டன.

இதன் போது, வைத்தியர் அர்ச்சுனா சார்பில், சட்டத்தரணி செலஸ்ரின் ஆஜராகியிருந்தார்.

இதன் போது, இரு தரப்பு விவாதங்களையும் கவனத்தில் எடுத்த நீதிபதி, 5 வழக்குகளையும் எதிர்வரும், செப்டம்பர் 11 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

, இராமநாதன் அர்ச்சுனா மீதான வழக்குகள் செப்டம்பர் 11ம் திகதிவரை ஒத்திவைப்பு !

Back to top button