10000 ரூபா தர மறுத்த மூதாட்டியை கொடூரமாக கொலை செய்த சந்தேக நபர்!

[ad_1]
கொழும்பில் உள்ள பகுதியொன்றில் 10 ஆயிரம் ரூபா பணம் கேட்டு 80 வயது மூதாட்டியின் கழுத்தை மிதித்து மூச்சு திணறடித்து கொலை செய்த சந்தேக நபரை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹோமாகம நீதவான் ரஜீந்திரா ஜயசூரிய உத்தரவிட்டுள்ளார்.
சந்தேகநபர் முச்சக்கர வண்டியில் இருந்து இறங்கி மூதாட்டி வீட்டிற்கு செல்வது மற்றும் குறித்த பெண்ணிடம் இருந்து கழற்றிச் சென்ற காதணிகளை செட்டித் தெருவில் உள்ள கடையொன்றுக்கு விற்பனை செய்தமை சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் கொலையுண்ட மூதாட்டின் மகளின் கணவருக்குச் சொந்தமான கட்டிடப் பொருட்கள் நிறுவனத்தில் பணிபுரிபவர் என தெரியவந்துள்ளது.
இவர் வீட்டுக்குச் செல்வதாகக் கூறி விடுமுறை பெற்று, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கொட்டாவ மாலபே வீதியின் 4 வழிச் சந்திக்கு அருகில் உள்ள வீட்டுக்கு வந்து அங்கிருந்த மூதாட்டியிடம் 10,000 ரூபா பணம் கேட்டுள்ளார்.
பணத்தை தராத மறுத்ததால் கோபமடைந்த நபர், அந்த பெண்ணின் காதணிகளை கழற்ற முயன்றுள்ளார்.
இதன்போது, சந்தேகநபர் மூதாட்டியை தரையில் வீழ்த்தி பெண்ணின் கழுத்தை காலால் மிதித்து அவர் அணிந்திருந்த காதணிகளை கழற்றி செட்டித் தெருவில் உள்ள நகைக்கடையில் விற்றுவிட்டு 5,000 ரூபாயுடன் வீட்டிற்கு சென்றுள்ளார்.
[ad_2]Lankafire








