திருகோணமலையில் காணாமல் போன இஸ்ரேலிய யுவதி மீட்பு !

கடந்த 26 ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்த தமர் அமிதாய் என்ற இஸ்ரேலிய யுவதியை இலங்கை இராணுவ புலனாய்வு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த யுவதி காணாமல் போன சம்பவம் நாட்டிலும் சர்வதேச ஊடகங்களிலும் பெரும் கவனத்தைப் பெற்றிருந்தது.
கடந்த 22ஆம் திகதி இலங்கைக்கு சுற்றுலா வந்த யுவதி மேற்கொண்டு திருகோணமலை பகுதியில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்தார் . கடந்த 26ஆம் திகதி ஹோட்டலில் இருந்து வெளியேறிய அவர் திரும்பி வராததையடுத்து ஹோட்டல் உரிமையாளர் கடந்த 29ஆம் திகதி உப்புவெளி பொலிஸாரிடம் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் தேடுதல் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.
தேடுதல் நடவடிக்கையின் விளைவாக நிலாவெளி பகுதியில் குறித்த யுவதி கண்டுபிடிக்கபட்டார் . கீறல்கள் மற்றும் சிறு காயங்களுக்கு உள்ளான அவர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றதுடன் மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
, திருகோணமலையில் காணாமல் போன இஸ்ரேலிய யுவதி மீட்பு !









