இலங்கை செய்திகள்

இன்று இரவு 9.30 வரையில் பாராளுமன்ற அமர்வு !

இன்று இரவு 9.30 வரையில் பாராளுமன்ற அமர்வு !

நாட்டில்  நிலவிய மோசமான காலநிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்த நிலைமைகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதம் இன்று புதன்கிழமை (4) மாலை. 05.30 மணிமுதல் இரவு 09.30 மணிவரை நடைபெறவுள்ளது.

சபாநாயகர் அசோக ரன்வல தலைமையில் செவ்வாய்க்கிழமை (03) அன்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.

இன்று இரவு 9.30 வரையில் பாராளுமன்ற அமர்வு !

இதன்படி, முன்னர் தீர்மானிக்கப்பட்டபடி, ஜனாதிபதியினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் தொடர்பான விவாதம் புதன்கிழமை (4)  காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இதனைத் தொடர்ந்து இது தொடர்பான வாக்கெடுப்பு மாலை 05 மணிக்கு இடம்பெறும். வாக்கெடுப்பு முடிவடைந்ததும் மாலை  5.30 மணிக்கு எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் அனர்த்த நிலைமைகள் குறித்த சபை ஒத்திவைப்பு விவாதத்தை இரவு 9.30 மணிவரை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Back to top button