கலை, கலாசாரம்
இந்திய சினிமா நடிகர், எழுத்தாளர், கதை சொல்லி பபா செல்லத்துரை கலந்துகொள்ளும் கதையாடலும் புத்தக கண்காட்சியும்

புத்தகங்கள் வாசிப்பது மற்றும் பரவலாக்கம் செயற்றிட்டத்தின் ஒரு அங்கமாக
மானுட நிறுவனத்தின் இணைப்பாக்கத்தில் கூத்தம்பலம் கலை பண்பாட்டு மையம் மற்றும் பட்டிப்பளை பிரதேச கலை இலக்கிய ஒன்றியத்தின் ஒழுங்கமைப்பில் கொக்கட்டிச்சோலை இராம கிருஷ்ண மிஷன் வித்தியாலயத்தில் 28.06.2024 திகதி வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு இடம்பெற உள்ளது.
இதில் பல்வேறு வகையான புத்தகங்களின் காட்சி படுத்தலும் விற்பனையும் பபா செல்லத்துரையின் கதையாடலும் உள்ளன. இப் புத்தக கண்காட்சியில் அதிகளாக அரச திணைக்களங்களின் அதிகாரிகள், எழுத்தாளர்கள், உள்ளூர் அமைப்புக்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலர் கலந்து கொள்ளவுள்ளனர். அனைவரும் கலந்துகொள்ள முடியும். அனுமதி இலவசம்.
, இந்திய சினிமா நடிகர், எழுத்தாளர், கதை சொல்லி பபா செல்லத்துரை கலந்துகொள்ளும் கதையாடலும் புத்தக கண்காட்சியும்









