கலை, கலாசாரம்

இந்தியாவில் முதல் குரங்கம்மை தொற்றாளர் அடையாளம்

[ad_1]

இந்தியாவில் முதல்முறையாக வெளிநாடொன்றில் இருந்து வந்தவருக்கு குரங்கம்மை தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குரங்கம்மை எனப்படும் Mpox (MonkeyPox) தொற்று ஆப்பிரிக்க நாடுகளில் வேகமாக பரவிவருகிறது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

மத்திய அரசு அனைத்து மாநிலங்களையும் உஷார்படுத்தி அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, தமிழகத்திலும் விமான நிலையத்தில் பயணிகளிடம் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள சுகாதாரத்துறை உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து தற்போது வெளிநாட்டில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், குரங்கம்மை நோய் பாதிப்புள்ள நாட்டில் இருந்து வந்தவருக்கு அறிகுறி காணப்பட்டது.

குரங்கம்மை நோய் அறிகுறிகளுடன் வந்த பயணி தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார் என இந்திய மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

[ad_2]
Lankafire

Back to top button