கலை, கலாசாரம்

ஆம்ஸ்ட்ராங் கொலை; இயக்குநர் நெல்சனிடம் விசாரணை

[ad_1]

அரசியல்வாதி ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக பிரபல ரவுடிகளான சம்போ செந்தில், சீசிங் ராஜா ஆகியோரை தனிப்படை பொலிஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

இதில் சம்போ செந்திலுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக கிருஷ்ணகுமார் என்கிற மொட்டை கிருஷ்ணன் என்ற வழக்கறிஞரையும் பொலிஸார் தேடி வருகின்றனர். அவர் மலேசியா தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

மொட்டை கிருஷ்ணன் தொடர்பாக இயக்குநர் நெல்சனின் மனைவி வழக்கறிஞர் மோனிஷாவிடம் ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

மொட்டை கிருஷ்ணனும் இயக்குநர் நெல்சனின் மனைவியும் கல்லூரி காலத்தில் இருந்து நண்பர்கள் எனவும், அவருடன் இயக்குநர் நெல்சன் மனைவி தொடர்ந்து செல்போனில் பேசிவந்த நிலையில் விசாரணை நடத்தப்பட்டது.

இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் ரவுடி மொட்டை கிருஷ்ணன் குறித்து திரைப்பட இயக்குநர் நெல்சனிடம் விசாரணை நடத்தப்பட்டது.

சம்மன் கொடுக்கப்பட்ட நிலையில் அடையாறில் உள்ள நெல்சன் வீட்டிற்கு சென்ற தனிப்படை காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

மொட்டை கிருஷ்ணன் குறித்து இயக்குநர் நெல்சனிடம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது.

[ad_2]
Lankafire

Back to top button