அருகம்குடாவில் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ள இஸ்ரேலியர்களிற்கு ரெஹான் எச்சரிக்கை
அருகம்குடாவில் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ள இஸ்ரேலியர்களிற்கு ரெஹான் எச்சரிக்கை

இலங்கையில் இஸ்ரேலிய சுற்றுலாப்பயணிகள் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என தெரிவித்துள்ள வெலிகமவின் முன்னாள் மேயரும் ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளருமான ரெஹான் ஜெயவிக்கிரம இதனை தடுத்துநிறுத்துவதற்கு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அருகம்குடாவில் பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து அமெரிக்கா விடுத்துள்ள எச்சரிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர் இலங்கை தற்போது கடும் பாதுகாப்பு அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றது இதன் காரணமாக சுற்றுலாத்துறை மீட்சிக்கான நாட்டின் முயற்சிகள் பாதிக்கப்படலாம் என தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக பதிவில் இதனை குறிப்பிட்டுள்ள அவர் இஸ்ரேலின் சுற்றுலா பயணிகளின் சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்ந்து நீடிக்கின்றதை அவதானிக்க முடிவதாகுறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் இதற்கு தீர்வை காணவேண்டும் அனைவருக்கும் சமமான வாய்ப்பை வழங்கவேண்டு;ம் என பலமுறை வேண்டுகோள் விடுக்கப்பட்ட போதிலும் அரசாங்கம் அதனை அலட்சியம் செய்துவிட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பிரச்சினைக்கு அவசரதீர்வை காணுமாறு அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ள அவர் எச்சரிக்கைகளை தொடர்ந்தும் அலட்சியம் செய்தால் எதிர்விளைவுகள் நாங்கள் எதிர்பார்ப்பதை விட மோசமானதாக அமையலாம் என தெரிவித்துள்ளார்..
‘ஸ்திரமின்மையை குழப்பத்தை ஏற்படுத்தும் இஸ்ரேலியர்களிற்கு ஒன்றை தெரிவித்து கொள்ளவிரும்புகின்றேன்,உலகின் ஏனைய பகுதிகளில் செய்ததை போன்று எங்கள் மண்ணை நீங்கள் சட்டவிரோதமாக பலவந்தமாக ஆக்கிரமிக்க முடியாது,நீங்கள் சட்டவிரோத வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடமுடியாது,ஏனையவர்களிள் வாய்ப்புகளை அழிக்க முடியாது,நாங்கள் உங்களை இந்த அழகான தேசத்திற்கு வரவேற்றுள்ள போதிலும்,இது உங்களுடைய நாடில்லை இந்த நாட்டின் சட்டங்களை நீங்கள்மதிக்கவேண்டும்”என ரெஹான் ஜெயவிக்கிரம தெரிவித்துள்ளார்.








