அரச பதவியை பயன்படுத்தி சட்டவிரோத நிதி திரட்டல் அம்பலம்
வட மாகாணத்தில் சம்பவம்

அரசாங்கம் மற்றும், அரச பதவியையும் பயன்படுத்தி சட்டவிரோதமாக நிதி திரட்டப்படுவது அம்பலமாகியுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் தனது பதவி மற்றும் அரசாங்கத்தையும் பயன்படுத்தி சட்ட விரோதமாக நிதி முறைகேடு செய்துள்ளமை ஆதாரபூர்வமாக வெளியாகியுள்ளது.
ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தில் இவ்வாறு பதவி துஸ்பிரயோகம் மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்டமை ஆதாரபூர்வமாக லஞ்ச ஊழல் ஆணைக்குழு மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு உள்ளிட்ட பல்வேறு தரப்புக்கு தகவல் வழக்கப்பட்டது.
ஆனாலும், குறித்த சம்பவங்கள் மறைக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெறாத நிலையில் இந்த நிதி திரட்டும் சம்பவம் அம்பலமாகியுள்ளது.
வர்த்தகர்கள், ஒப்பந்தகாரர்கள், செல்வந்தர்களை இலக்கு வைத்து இவ்வாறு நிதி திரட்டப்பட்டு வந்துள்ளது. தமது வர்த்தக செயற்பாட்டுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காகவும், ஒப்பந்த வியாபாரத்திற்காகவும் பலரும் நிதி வழங்கியுள்ளனர்.
ஒரு அரச நிறுவனத்தின் தலைவர் அரச நிறுவன பதவி முத்திரை மற்றும் தபால் தலையை பயன்படுத்தி நிதி சேகரிப்பில் ஈடுபடுவது சட்டவிரோதமானது.
ஒட்சுட்டான் பிரதேச செயலாளரால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு பாரிய நிதி மற்றும் பதவி முறைகேடுகள் தொடர்பில் லஞ்ச ஊழல் ஆணைக்குழு, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு, உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தது.
இந்த நிலையில், குறித்த சம்பவங்கள், முறைப்பாடுகளை விசாரணை செய்யாது கிடப்பில் போடப்பட்டதுடன், பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் NPP அரசின் மீதா நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தி உள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்









