இலங்கை செய்திகள்

அரச நிறுவனங்கள் மற்றும் ஊழியர்களுக்கு வெளியிடப்பட்ட முக்கிய அறிவிப்பு

அரச நிறுவனங்கள் மற்றும் ஊழியர்களுக்கு வெளியிடப்பட்ட முக்கிய அறிவிப்பு

நாடாளவிய ரீதியிலுள்ள அனைத்து அரச நிறுவனங்களிலும் நாளையதினம் புத்தாண்டு கடமைகளை ஆரம்பிக்கும் உத்தியோகபூர்வ வைபவம் இடம்பெறும் என பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.

அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் அரசியலமைப்பு சபைகளுக்கு இது தொடர்பில் அறிவித்துள்ளதாக அமைச்சின் செயலாளர் எஸ்.ஆலோக பண்டார தெரிவித்துள்ளார்.

புதிய வருடத்தில் “தூய்மையான இலங்கை” தேசிய வேலைத்திட்டத்துடன் உத்தியோகபூர்வ செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட வேண்டுமென அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரச மற்றும் தனியார் துறையுடன் இணைந்து தூய்மையான இலங்கை திட்டத்தை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாளை ஜனாதிபதி அலுவலகத்தில் ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

அரச நிறுவனங்கள் மற்றும் ஊழியர்களுக்கு வெளியிடப்பட்ட முக்கிய அறிவிப்பு

அதற்கமைவாக அனைத்து அரச நிறுவனங்களின் தலைவர்களும் முழு அரச சேவை ஊழியர்களின் பங்களிப்புடன் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெறும் பணிகளுக்கு சமமாக தமது பணியிடங்களில் பணிகளை ஆரம்பிக்க வேண்டுமென பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

தூய்மையான இலங்கை நிகழ்ச்சித் திட்டத்தைத் தொடங்கும் தேசிய நிகழ்வை அனைத்து அரசு மற்றும் தனியார் இலத்திரனியல் அலைவரிசைகள் ஊடாக ஒலி, ஒளிபரப்புவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அத்துடன், அனைத்து அரச நிறுவனங்களின் ஊழியர்களும் அதனை காணும் வசதியை ஏற்படுத்திக் கொடுக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, அனைத்து அரச ஊழியர்களும் தூய்மையான இலங்கை உறுதிமொழியை நேரலையில் வாசிக்குமாறு பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தனது சுற்றறிக்கை மூலம் மேலும் தெரிவித்துள்ளது.

Back to top button