சர்வதேச செய்திகள்

அமெரிக்காவில் இடம்பெற்ற கோர விபத்து… பரிதாபமாக உயிரிழந்த இளம் மாணவி!

அமெரிக்காவில் இடம்பெற்ற கோர விபத்து... பரிதாபமாக உயிரிழந்த இளம் மாணவி!

அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் சென்ற கார் விபத்துக்குள்ளான சம்பவத்தில் மாணவி ஒருவர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விபத்து சம்பவம் நேற்று (14-12-2024) அதிகாலை டென்னசி மாநிலம், மெம்பிஸ் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் 26 வயதான நாக ஸ்ரீ வந்தன பரிமளா என்ற இந்திய மாணவியே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மேலும், பவன், நிகித் ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து தொடர்பாக பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், காரின் பிரேக் பிடிக்காததால் மற்றொரு கார் மீது மோதியதாக தெரிய வந்துள்ளது.

Back to top button