கொக்கிகுமாரின் மர்ம மர*ணம்.!! சற்று முன்னர் குடும்பத்தார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
இளைஞரான சஜித் எனப்படுகின்ற கொக்கிக்குமார் என்பவரின் திடீர் மரணம் தொடர்பாக அவரது நண்பர்கள் பல கேள்விகளை எழுப்பிய நிலையில் அவரது குடும்பத்தினர் தற்போது சில விடயங்களை பகிர்ந்துள்ளதாக இலங்கையில் இருந்து இயங்கும் யூரிப் செய்தியாளர் தெரிவித்துள்ளார். சம்பவத்தின் உண்மையான காரணம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்களை எதிர்பார்த்து காத்திருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுபற்றி மேலும் தெரியவருகையில்….
குடும்பத் தகவல்களின் படி, கொக்கிக்குமாரனுக்கு சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட மூத்த சகோதரர் ஒருவரும், கல்வியில் சிறந்து விளங்கும் இளைய சகோதரியும் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குடும்பத்துடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாகக் கூறப்படும் சுஜித் என்ற கொக்கிகுமார் கொழும்பு மற்றும் வவுனியா உள்ளிட்ட பகுதிகளில் கல்வி கற்றிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சம்பவத்திற்கு சில நாட்களுக்கு முன்பு கொக்கிக்குமார் தனது தாயாரிடம் உடல்நலக் குறைவு மற்றும் உடல் பலவீனம் குறித்து தெரிவித்திருந்ததாக குடும்பத்தினர் கூறுகின்றனர். பின்னர் அவரது உடல்நிலை வேகமாக மோசமடைந்ததாகவும், அதனைத் தொடர்ந்து மருத்துவ உதவி பெற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அவர் சிகிச்சை பெற்றதாகக் கூறப்படும் மருத்துவமனை மனநல சிகிச்சை சேவைகளையும் வழங்கும் நிலையமாக இருந்ததாக தகவல்கள் கூறுகின்றன.

இதற்கிடையில், கொக்கிக்குமாரனின் உடல் ஒரு பூங்கா அருகே கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும், மரணத்திற்கான சரியான காரணம் தொடர்பில் இதுவரை அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் வெளியாகவில்லை. ஆரம்ப கட்ட தகவல்களின் அடிப்படையில் பல்வேறு ஊகங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. ஆனால் அவற்றில் எதுவும் இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
குடும்ப உறுப்பினர்களின் கூற்றுப்படி, அவரது உடல்நிலை அல்லது மனநிலை தொடர்பான முக்கிய தகவல்கள் தங்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படவில்லை என்றும், சம்பவத்தின் பின்னணி முழுமையாக வெளிச்சத்துக்கு வர வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில், மருத்துவ மற்றும் விசாரணை அதிகாரிகளின் அறிக்கைகள் வெளியாகிய பின்னரே மரணத்திற்கான உண்மையான காரணம் உறுதிப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குடும்பத்தினரும் உறவினர்களும் சம்பவம் தொடர்பான முழுமையான விளக்கத்தை அதிகாரிகளிடமிருந்து எதிர்நோக்கி உள்ளனர்.
©LankaFire