ஐரோப்பாவின் அழகான குளிர்கால நகரங்களில் இரண்டு சுவிஸ் நகரங்கள் இடம்பிடிப்பு
ஐஸ்லாந்து விமான நிறுவனம் Icelandair நடத்திய ஒரு புதிய ஆய்வில், ஐரோப்பாவில் குளிர்காலத்தை அனுபவிக்க சிறந்த நகரங்கள் பட்டியலில் இரண்டு சுவிஸ் நகரங்கள் இடம்பெற்றுள்ளன. Luzern நான்காவது இடத்தையும், Bern எட்டாவது இடத்தையும் பெற்றுள்ளன.
இந்த தரவரிசை மூன்று முக்கிய அம்சங்களை அடிப்படையாகக் கொண்டது: ஜனவரி மாத சராசரி பனிப்பொழிவு, நட்சத்திரக் காட்சி (Stargazing) பெறும் வாய்ப்பு மற்றும் Christmas சந்தைகளின் மக்கள் ஈர்ப்பு. ஒவ்வொரு காரணிக்கும் சமமான முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. மேலும் Instagram-ல் Christmas market ஹேஷ்டேக்களுடன் பதிவிடப்படும் புகைப்படங்களின் எண்ணிக்கையும் மதிப்பீட்டில் சேர்க்கப்பட்டது.
லூசெர்ன் ஏரிக்கரையோர அழகு, பழமையான மரப்பாலங்கள், மற்றும் குளிர்காலத்தில் அதிக பனிப்பொழிவு ஆகியவை இதை சிறந்த குளிர்கால அனுபவ நகரமாக உருவாக்குகின்றன. மேலும் பாரம்பரிய Christmas சந்தைகள் உலகம் முழுவதிலிருந்தும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றன.

அதேபோல், சுவிட்சர்லாந்தின் தலைநகரமான பெர்ன், அதன் நடுகால கட்டிடக்கலை, பனியால் அலங்கரிக்கப்பட்ட பழமையான தெருக்கள், மேலும் ஒளி மாசு குறைவான அமைதி சூழல் காரணமாக நட்சத்திரங்களை தெளிவாகக் காணும் வாய்ப்பு ஆகியவற்றால் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.
விசித்திரமாக, இந்த ஆய்வை நடத்தியது ஐஸ்லாந்தின் தேசிய விமான நிறுவனம் என்றாலும், தலைநகரமான ரெய்க்யாவிக் முதல் 10 நகரங்களில் இடம்பெறவில்லை. ஆய்வு முழுமையாக புள்ளிவிவர அடிப்படையில் செய்யப்பட்டதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
குளிர்கால சுற்றுலா சுவிஸ் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் நிலையில், இந்த இரு நகரங்களும் உலகளவில் மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளன.