Saturday, September 7, 2024
LANKA FIRE🔥 FM Live
HomeSrilanka Top Newsயாழ்.ஹரிகரன் நிகழ்ச்சி இடைநிறுத்தம் : போலீசார் தடியடி..!

யாழ்.ஹரிகரன் நிகழ்ச்சி இடைநிறுத்தம் : போலீசார் தடியடி..!

ஹரிகரன் உட்பட தென்னிந்திய திரைப்பிரபலங்கள் கலந்து கொள்ளும் இசை நிகழ்ச்சி தற்போது யாழில் இடம்பெற்று வருகின்றது.

நிகழ்ச்சி அறிவிப்பு வெளியானதில் இருந்து ஒரு தரப்பினர் இந்நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றார்கள். எனினும் பல்வேறு எதிர்ப்புகளையும் மீறி மிக பிரமாண்டமான முறையில் தமன்னா உட்பட பல பிரபலங்கள் கலந்து கொள்வதாக நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டது.

எனினும் தற்போது ஒரு சிலர் அத்துமீறி 25 ஆயிரம் செலவு செய்து முன்வரிசையில் டிக்கட் எடுத்து அமர்ந்திருக்கும் பகுதியில் நுழைவதாகவும் அங்கு சலசலப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்.ஹரிகரன் நிகழ்ச்சி

நிகழ்ச்சியில் குழப்பம் உண்டான நிலையில் சற்று நேரம் நிகழ்ச்சி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக எமது யாழ் நிருபர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் நிலமைகளை கட்டுப்படுத்த நடிகை ரம்பா அவர்கள் போலீசாரையோ அரசாங்கத்தையோ நம்பி நாம் வரவில்லை உங்களை நம்பித்தான் வந்துள்ளோம் என மேடையில் ஏறி பேசி குழப்பம் ஏற்படுத்துபவர்களை சமாதானப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இன்றைய விளம்பரங்கள்

------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- -------------------------------------------

அதிக பார்வைகள்