அம்பலாங்கொடையில் சுட்டுக் கொல்லப்பட்டவர் ஓர் அப்பாவி! பொலிஸார் தெரிவிப்பு!
அம்பலாங்கொடையில் சுட்டுக் கொல்லப்பட்டவர் ஓர் அப்பாவி! பொலிஸார் தெரிவிப்பு!

அம்பலாங்கொடையில் நேற்று (14) இரவு ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு, அந்தப் பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து அவர் பொலிஸாருக்குத் தகவல் அளித்ததாக எழுந்த சந்தேகமே காரணம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
அம்பலாங்கொடை, இடம்தொட்டை பௌத்த விஹாரைக்கு அருகில் நேற்று இரவு 6:45 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் பொடி சுட்டா என்ற கிருஷாந்த மெண்டிஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவர் அந்தப் பகுதியில் தினக்கூலி வேலை செய்து வசித்து வந்த ஓர் அப்பாவி நபர் என்று கூறப்படுகிறது.
45 வயதான பொடி சுத்தா நான்கு குழந்தைகளின் தந்தை என்றும், அவர் மீது எந்தக் குற்றவியல் குற்றச்சாட்டுகளும் இல்லை என்றும் அப்பகுதியில் அமைதியாக வசித்து வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இருப்பினும், இந்தப் படுகொலையை சமன் பிரியந்த எனப்படும் சமன் கொல்லா என்ற குற்றவாளி செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கொலை செய்யப்பட்ட நபர் கடந்த ஜனவரி மாதம் சமன் கொல்லா என்ற குற்றவியல் குழுவைச் சேர்ந்த இருவரால் தாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.