இங்கு உத்தமர்கள் யார்.? கிருஸ்ணா செய்தது சரியா.? வலுக்கும் வாதம்.!!
இங்கு உத்தமர்கள் யார்.? கிருஸ்ணா செய்தது சரியா.? வலுக்கும் வாதம்.!!

இங்கு உத்தமர்கள் யார்.? கிருஸ்ணா செய்தது சரியா.? வலுக்கும் வாதம்.!!
அண்மையில் யாழ்ப்பாணத்தின் பிரபல யூரியுப்பரான கிருஸ்ணா பெண் தலமைத்துவம் உள்ள ஒரு வீட்டில் உதவி செய்யும் நோக்குடன் இரவு வேளையில் சென்று அங்கு நடந்து கொண்ட விதம் மற்றும் அங்குள்ள இளம் பெண்ணிடம் பேசிய வார்ததைப்பிரயோகங்கள் தொடர்பில் பெரும் சர்ச்சை ஏற்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து இந்த விடயம் பாராளுமன்றம் வரை சென்று பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுணா அவர்களால் குறித்த கிருஸ்ணா உட்பட டி.கே.கார்த்தி என்கின்ற யுரிப்பரையும் விசாரணை செய்யவேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.
இதனை தொடர்ந்து கிருஸ்ணா சம்பவம் இடம்பெற்ற மறுநாள் மீண்டும் அந்த பெண் தலமைத்துவம் உள்ள வீட்டிற்கு சென்ற வேளை அங்குள்ள கிராம இளைஞர்களால் சுற்றிவளைக்கப்பட்டு அவர் மீது பல்வேறு கேள்விக்கணைகள் தொடுக்கப்பட்டன. இருப்பினும் தான் தவறு செய்யவில்லை. தங்கை என்ற உரிமையுடன் பேசியதாகவும் அவர்கள் அழைத்தே உதவி செய்யும் நோக்குடன் வந்ததாகவும் அங்குள்ளவர்களிடம் தெரிவித்திருந்தார். இறுதியில் அவர்களால் மல்லாகம் நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்ட கிருஸ்ணா மீது போலீசார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
இந்தியுடன் கூட்டிணைப்பு செயலை முன்னேற்றத் தயாராக உள்ளோம் – விஜித ஹேரத்
இதனடிப்படையில் இன்று நீதிமன்றம் அவர்களுக்கு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டிருந்தது. கிருஸ்ணா தொடர்பில் பல்வேறு தரப்பினரும்ப பல்வேறு கருத்துக்களை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் அவர் எத்தனையோ குடும்பங்களுக்கு உதவித்திட்டங்களை செய்திருக்கிறார் எனவும் திட்டமிட்டு அவரை நசுக்கும் முயற்சியில் சிலர் ஈடுபடுவதாகவும்ப பலர் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.
கிருஸ்ணா என்ற அந்த தனிநபர் மீதான சர்ச்சைகள் ஒன்றும் புதிய விடயமல்ல. ஆரம்பத்திலும் பெண்கள் சார்ந்தும்.. சுதந்திர தினத்தில் தேசிய கொடியை ஏந்திச்சென்றமை தொடர்பிலும் நிதி மோசடி தொடர்பிலும் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியிருந்தார். இருப்பினும் இதில் பல குற்றச்சாட்டுகள் எவ்வித ஆதாரங்களும் இன்றியே சுமத்தப்படுவதாக தெரிகிறது.
தேசிய கொடி விவகாரம் தொடர்பில் கருத்து கூறிய கிருஸ்ணா அது திட்டமிட்டு செய்யப்பட்ட விடயமல்ல எனவும் இது சர்ச்சையை ஏற்படுத்தும் என தனக்கு தெரியாது எனவும் மன்னிப்பு கேட்டிருந்தார். எனினும் கிருஸ்ணா மீது சுமத்தப்படும் பெண்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கோ அல்லது நிதி மோசடி தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கோ இதுவரை எவரும் ஆதாரங்களை சமர்ப்பித்ததாக தெரியவில்லை.
இந்தியுடன் கூட்டிணைப்பு செயலை முன்னேற்றத் தயாராக உள்ளோம் – விஜித ஹேரத்
மெல்லுகிற வாய்க்கு மெதுவடை கிடைத்தால் போல பலரும் சமூகவைலத்தளங்களில் வைரலாகும் விடயங்களையே திரும்ப திரும்ப பேசிக்கொண்டிருக்கிறார்களே தவிர பேசப்படும் விடயங்களுக்கு ஆதாரங்களை தேடும் முயற்சியில் இறங்குவதில்லை என்பதே இங்கு உண்மையான விடயம்.
எது எப்படியோ ஆரம்பத்தில் இருந்த கிருஸ்ணா என்கின்ற நபருக்கும் தற்போது கடந்த 1 வருடங்களாக இருக்கும் கிருஸ்ணா என்ற நபருக்கும் பல மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதாக புலம்பும் அவரின் விசிறிகள் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். பணம் அதிகரிக்க அதிகரிக்க அவரின் நடத்தையில் மாற்றங்களும் எகத்தாளமான பேச்சுக்களும் வறுமையில் வாடும் நபர்களிடத்திலையே நக்கலும் நையாண்டியுமாக அவரின் செயற்பாடுகளும் விரும்பத்தாகதவையாகவே இருப்பதாக சமூக ஆர்வலர்கள் குறிப்பிடுகிறார்கள்.
இரவில் அக்கம் பக்கம் பார்த்துப்பேசு.. பகலில் அதுவும் பேசாதே என்ற பழமொழி ஒன்று உள்ளது. ஆனால் கிருஸ்ணா என்பவர் இரவில் உதவி செய்யப்போய் அங்கே 18 வயது இளம் பெண்ணிடம் பால்குடி மறக்கவில்லையா..? நடிக்கிறாயா..? யாரையாச்சும் லவ் பண்றீயா..? வீடியோக்கு வரமாட்டியா என கேள்வி கேட்டு அதனை தனது யூரிப்பிலையே பதிவேற்றம் செய்து தான் வெட்டிய குளிக்குள் தானே விழுந்த கதையாகிக்கிடக்கிறது அவரின் நிலமை.
கிருஸ்ணா என்கின்ற நபர் பலரை பல குடும்பத்தை உயர்த்திவிட்டிருக்கிறார் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அவர் யார் பணத்தில் உதவி செய்கிறார் என்ற விமர்சனத்திற்கு அப்பால் அவரிடம் உதவிக்காக அனுப்பப்படும் பணம் சரியானவர்களை சென்றடைகிறதான என்ற கேள்வியே முக்கியம்.
அப்படி உதவி செய்வதற்காக பணம் கொடுத்து அதை கிருஸ்ணா கொள்ளையடித்ததாக இதுவரை எந்த புலம்பெயர் தமிழரும் முறைப்பாடு செய்ததாக தெரியவில்லை. இப்படியிருக்கு அவர் செய்யும் வேலை தவறு என கூற யாருக்கும் உரிமை இல்லை என்பதே உண்மை. ஆனால் தனிநபர் ஒழுக்கம் என்பது எம்மை நம்பியிருக்கும் ஒவ்வொருவருக்கும் எடுத்துக்காட்டாக அமையும் என்பதும் நிதர்சனமான உண்மை. சமூகவலைத்தளம் மூலம் இலங்கை மட்டுமல்லாமல் தமிழர் அதிகமாக வாழும் ஐரோப்பா தொடக்கும் உலகம் முழுவதிலும் இருந்து தமிழர்கள் விரும்பி பார்க்கும் ஒருவராக கிருஸ்ணா அறியப்படுகிறார்.
அப்படியான அவர் தான் பேசும்போது நிதானம் இழக்காமல் நக்கல் நையாண்டிகளை தவிர்த்து கொஞ்சம் பொறுப்புணர்வோடு நடப்பது என்பது இனிமேலாவது கடைப்பிடிக்கவேண்டிய ஒரு பண்பாகவே பார்க்கப்படுகிறது.
அதுதான் அவரின் பேச்சு வழக்கு அல்லது அதுதான் அவரது வழமையான மொழிநடை என்றால் உதவி செய்யும் விடயத்தை அவர் நிறுத்திவிட்டு நக்கல் நையாண்டியுடன் ஒரு யூரிப் சானலை நடத்துவது இன்னும் சிறந்தது. யாழில் பலர் அப்படி யூரிப் சானல் நடத்தி பலரின் அன்பையும் ஆதரவையும் ஏன் சம்பாத்தியத்தையும் பெற்றுவருகிறார்கள். ஆனால் வறியவர்களுக்கு உதவி என்ற பெயரில் அவர்களின் உணர்வுகளோடு விளையாடுவது என்பதும் மன்னிக்கமுடியாது குற்றமே…