சர்வதேச செய்திகள்பிரதான செய்திகள்
லண்டன் பேரூந்து விபத்தில் புலம்பெயர் தமிழ்க் குடும்ப்ப் பெண் பலி!!
லண்டன் பேரூந்து விபத்தில் புலம்பெயர் தமிழ்க் குடும்ப்ப் பெண் பலி!!

லண்டன் பேரூந்து விபத்தில் புலம்பெயர் தமிழ்க் குடும்ப்ப் பெண் பலி!!
வடமேற்கு லண்டனில் பேருந்து நிறுத்தத்தில் ஏற்பட்ட விபத்தில் சித்ரா வான்மீகநாதன் என்ற தமிழ் பெண் ஒருவர் உயிர் இழந்து உள்ளார்.
வெம்ப்லியைச் சேர்ந்த 46 வயதான அவர் திங்களன்று இரவு 9.20 மணியளவில் ஹாரோவின் பெஸ்பரோ சாலையில் இடம் பெற்ற வாகன விபத்தில் உயிர் இழந்தார். அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்தனர்.
மேலும் இரண்டு பாதசாரிகள், 12 வயது சிறுவன் மற்றும் 30 வயதுடைய ஒரு பெண், பஸ்ஸும் காரும் மோதியதில் காயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டி மரணத்தை ஏற்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.