பிரதான செய்திகள்

கனமழை காரணமாக நிரம்பி வழியும் நீர்த்தேக்கங்கள்

கனமழை காரணமாக நிரம்பி வழியும் நீர்த்தேக்கங்கள்

கனமழை காரணமாக நிரம்பி வழியும் நீர்த்தேக்கங்கள்

நாட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குச் சொந்தமான 73 முக்கிய நீர்த்தேக்கங்களில் 46 நீர்த்தேக்கங்களில் நீர் நிரம்பி வழிந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக அம்பாறை, அனுராதபுரம் பதுளை, மட்டக்களப்பு ஹம்பாந்தோட்டை மற்றும் காலி ஆகிய மாவட்டங்களிலுள்ள நீர்த்தேக்கங்களில் இருந்து நீர் வழிந்து செல்வதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

கனமழை

அத்துடன் கண்டி மாவட்டத்தில் மூன்று நீர்த்தேக்கங்களிலும், குருநாகல் மாவட்டத்தில் 5 நீர்த்தேக்கங்களில் இருந்தும் நீர் நிரம்பி வழிந்து செல்வதாகவும், இதுவரையில் மொத்தமாக 46 நீர்த்தேக்கங்களில் நீர் நிரம்பி வழிந்து செல்வதாகவும் நீர்ப்பாசனத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Back to top button