பிராந்திய செய்திகள்வட மாகாண செய்திகள்
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பெண் ஒருவரிடம் கைவரிசை

வவுனியா, கந்தபுரம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பெண் ஒருவரின் தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்றுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
வவுனியா, கந்தபுரம் பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் வீதியில் சென்றுக்கொண்டிருந்த போது, மோட்டர் சைக்கிளில் வந்த இருவர் அவரை பின் தொடர்ந்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, மோட்டார் சைக்கிளில் வந்த இருவரும் குறித்த பெண்ணிடம் வேறு ஒருவரின் முகவரியை விசாரிப்பது போன்று அவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்றுள்ளனர்.
பொலிஸார் விசாரணை
மேலும், இது தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.