கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட நபர் மக்கள் ஒன்றுகூடியமையால் பதற்ற நிலை !
கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட நபர் மக்கள் ஒன்றுகூடியமையால் பதற்ற நிலை !

கண்டி, வத்தேகம பிரதேசத்தில் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டதையடுத்து, மக்கள் வீதிக்கு இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமையால் அங்கு பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.
வத்தேகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டலஹகொட பகுதியில் நபர் ஒருவர் கூரிய ஆயுதங்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர் வத்தேகம பகுதியை சேர்ந்த 38 வயதுடையவராகும்.குற்றச் செயல்களுடன் தொடர்புடைய ஏனைய சந்தேக நபர்களைக் கண்டறிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வத்தேகம பொதுச் சந்தையில் மீன் வியாபாரியான இவர், நேற்று முன்தினம் இரவு தனது வீட்டுக்கு முன்னால் வைத்து வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
ஆபத்தான நிலையில் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.