பிராந்திய செய்திகள்நிகழ்வுகள்மலையக செய்திகள்
மலையக பெண் படைப்பாளி பா.நிவேதாவின் “சாதிப்புண்” நூல் வெளியீடு!
வெளியானது மலையகத்தின் அடுத்த இளம் பெண் படைப்பாளி கந்தலோயா பா.நிவேதாவின் சாதிப்புண் !
கடந்த 27-01-2024 சனிக்கிழமை காலை 9:30 மணியளவில் கந்தலோயா தமிழ் மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில் கந்தலோயாவின் முதல் புத்தக வெளியீட்டு நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெற்றது!
நிகழ்வில் #சாதிப்புண் எனும் சிறுகதை நூல் வெளியீடு செய்யப்பட்டது. மலையக கல்வி, கலை, கலாசார, பண்பாட்டு துறைகளில் சிறந்து விளங்கும் மலையகத்தின் முன்னோடி பாடசாலையான கந்தலோயா பாடசாலை மாணவியும், தற்போது பல்கலைக்கழக மாணவியுமான பா.நிவேதிதா தன்னை ஒரு எழுத்தாளராக, புத்தக ஆக்குநராக, சிறுகதையாளராக அதற்கெல்லாம் மேலாக மலையகத்தின் அடுத்த பெண் எழுத்தாளராகவும், கந்தலோயா தோட்டத்தின் முதலாவது எழுத்தாளராக அல்லது முதல் நூல் வெளியீட்டாளராக தன்னை வரலாற்றில் தடம் பதித்திருக்கிறார்.
பெற்றோர்கள், உடன்பிறந்த சகோதரர்களின் பேராதரவில் இந்நிகழ்வு சிறப்பாக நடந்தேறியது. இந்நிகழ்வுக்கு கந்தலோயா பாடசாலை அதிபர் திரு.கருணாகரன் தலைமை வகித்ததுடன் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருந்த வளவாளரும் நூல் விமர்சகருமான திரு அருள்கார்க்கி அவர்கள் இணைந்து கொண்டதுடன் முதல் பிரதி எழுத்தாளரினால் அவரது பெற்றோர்க்கு வழங்கப்பட்டது.
சிறப்பு பிரதிகளை எழுத்தாளரின் சகோதரர்கள் பெற்றுக் கொண்டதுடன் அதனைத் தொடர்ந்து பாடசாலை அதிபர் உள்ளிட்ட கந்தலோயா தோட்ட மக்கள் அனைவருக்கும் சிறப்பு பிரதிகள் வழங்கப்பட்டது. இவர்களுடன் கந்தலோயா பாடசாலையின் பல்கலைக்கழக மாணவர்கள், விடியல் குழு உள்ளிட்ட இன்றைய மாணவர்களும் நூல் பிரதிகளைப் பெற்றுக் கொண்டனர்.
மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பித்த நிகழ்வில் பின்னர் தேவாரம்,
வரவேற்புரை என்பன இடம்பெற்றது. வரவேற்புரையை திரு. கஜன் வழங்கினார்.
மேற்படி நூலின் தலைமை உரையை கந்தலோயா பாடசாலை அதிபர் வழங்க அதனை தொடர்ந்து அறிமுக உரையினை எழுத்தாளர் கேஜி அவர்கள் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து திரு. அருள் கார்க்கி அவர்களினால் நூல் விமர்சனம் இடம்பெற்றது. கந்தலோயா வரலாற்றில் இது ஒரு மைல் கல் நிகழ்வாகும்.
அத்தோடு மலையக எழுத்தாளர்களின் பெண் எழுத்தாளர்களில் ஒருவராக எழுத்தாளர் நிவேதா இணைந்து கொண்டமை சிறப்பம்சமாகும்.
மேலும் மேலும் பல தரமாக ஆக்கங்களை படைத்து எழுத்து துறையில் தனக்கென ஒரு தனி அடையாளத்தினை பெற மனதார வாழ்த்துகிறேன் .
சாதிப்புண் (சிறுகதை)
விலை: 450 /=
தொடர்புகளுக்கு :நூலாசிரியர்
பதிவு – கேஜி கேஜி